Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 14/10/2016

இன்றைய ராசிபலன் – வெள்ளி 14/10/2016

165
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.15 – 10.15  காலை – 10.30 – 12.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: மகம், பூரம்


mesahamமேசம்: இன்றையதினம் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் நாள்.


rishabamரிஷபம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். சகோதர வகையில் உதவி கள் கிடைக்கும். கல்யாண பேச்சு வெற்றியடையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத் யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


mithunam

மிதுனம்: இன்று நீங்கள் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


kadakamகடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல் நீங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.


simam

சிம்மம்: புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல் படுவார்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


kanniகன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையொப்பமிடாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


thulam

துலாம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்துப் போகும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது வேலை அமையும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


viruchigam

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆடை, ஆபரணம் சேரும். சபைகளில் மதிக்கப் படுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.


dhanusuதனுசு: கடந்த 2 நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதி கிட்டும் நாள்.


magaramமகரம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.


kumbam

கும்பம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.


meenamமீனம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க துவங்கு வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகதிறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here