Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 15/01/2016

இன்றைய ராசிபலன் – வெள்ளி 15/01/2016

254
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: பூரம்


mesaham

மேசம்: இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கைத் தருவார்கள். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். சுறுசுறுப்பாவீர்கள். விலை உயர்ந்த சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனநிம்மதி கிட்டும் நாள்.


rishabam

ரிஷபம்: குடும்பத்தினருடன் வாக்குவாதம் வந்து நீங்கும். எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். பொறுமைத் தேவைப்படும் நாள்.


mithunamமிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் பெருமையாக பேசப்படு வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் ஆதாய மடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


kadakamகடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகமாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எதிர்ப்புகள் அடங்கும் நாள்.


simamசிம்மம்: எதிர்பார்த்த வேலைகள் முடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பர். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்த பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். தேவை பூர்த்தியாகும் நாள்.


kanniகன்னி: மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க கூடாது என முடிவெடுப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்காக வாதாடி சாதித்துக் காட்டுவீர்கள். கனவு நனவாகும் நாள்.


thulamதுலாம்: சவால்கள், விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரச்னைகள் வெகுவாக குறையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி சில முடிவுகள் எடுப் பார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


viruchigamவிருச்சிகம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ் வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


dhanusuதனுசு: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். இனிமையான நாள்.


magaramமகரம்: இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் 2,3 முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையில் இருந்து மகிழ்ச்சி தங்கும் நாள்.


kumbamகும்பம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். தடங்கள் ஏற்படும் நாள்.


meenamமீனம்: மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து செயல்பட தொடங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். உங்களால் மற்றவர் கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here