Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 18/12/2015

இன்றைய ராசிபலன் – வெள்ளி 18/12/2015

224
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.00 – 10.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்


mesahamமேசம்: மாறுபட்ட யோசனை உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சாதிக்கும் நாள்.


rishabamரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவி கிடைக்கும். கல்யாண பேச்சு சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


mithunamமிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறு வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்ட காரியம் துலங்கும் நாள்.


kadakamகடகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகள் கேட்டதை நீங்கள் வாங்கித் தருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.


simamசிம்மம்: எளிதில் முடிய வேண்டிய சில காரியங்களை 2, 3 முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். போராடி வெல்லும் நாள்.


kanniகன்னி: செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பர். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.


thulamதுலாம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உங்கள் உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டம் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


viruchigamவிருச்சிகம்: இன்று நீங்கள் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டவை தாமதமாகி முடியும் நாள்.


dhanusu

தனுசு: கடந்த 2 நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.


magaramமகரம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் பழைய பிரச்னை தீரும். உழைப்பால் உயரும் நாள்.


kumbamகும்பம்: இன்று நீங்கள் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிப்படுவீர். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கி தவிப்பீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


meenamமீனம்: கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here