Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 22/01/2016

இன்றைய ராசிபலன் – வெள்ளி 22/01/2016

302
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை


mesaham

மேசம்: நீங்கள் திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். பேராசை படாமல் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


rishabam

ரிஷபம்: இன்று நீங்கள் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்து வார்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.


mithunamமிதுனம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.


kadakamகடகம்: இன்று உங்களுக்கு வேலைச்சுமை வந்துப் போகும். பிற்பகல் முதல் இருந்த மனக்குழப்பம், வீண் டென்ஷன் விலகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.


simamசிம்மம்: உங்கள் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறை வேறும். நண்பர்கள், உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புதுமை படைக்கும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தினருடன் நீங்கள் மனம் விட்டு பேசு வீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்களின் பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். சிறப்பான நாள்.


thulamதுலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உங்களை நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.


viruchigamவிருச்சிகம்: இன்று உங்களுக்கு சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.


dhanusuதனுசு: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


magaramமகரம்: புதிய பாதையில் நீங்கள் பயணிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் பிள்ளைகள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல் படுவார்கள். உங்களிடம் இருந்து விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.


kumbamகும்பம்: துணிச்சலாக நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.


meenamமீனம்: இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பம் வந்து போகும். பிற்பகல் முதல் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.