இன்றைய ராசிபலன் – வெள்ளி 23/12/2016

இன்றைய ராசிபலன் – வெள்ளி 23/12/2016

42
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.15 – 10.15  காலை – 10.30 – 12.00  
மாலை – 4.45 – 5.45    மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி


mesahamமேசம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பள்ளிப் பருவ உறவுகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். சிறப்பான நாள்.


rishabamரிஷபம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணம் வரும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடன் தீரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


mithunamமிதுனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். மனைவி வழியில் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். புகழ், கௌரவம் கூடும் நாள். 


kadakam

கடகம்: சின்ன சின்ன பிரச்னைகள் குடும்பத்தில் தலைத்தூக்கும். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை பற்றி குறைக் கூற வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள். 


simamசிம்மம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


kanni

கன்னி: இன்று நீங்கள் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை முடிப்பதில் இருந்த இழுபறி நிலை மாறும். மகிழ்ச்சி தங்கும் நாள். 


thulam

துலாம்: இன்று உங்களுக்கு வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


viruchigamவிருச்சிகம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புகூடும். நெருங்கிய வர்களுக்காக சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். 


dhanusuதனுசு: இன்று உங்களுக்கு எதிர்பார்த்தவை தாமதமாகும். நண்பகல் முதல் குடும்பத்தில் அமைதி திரும்பும். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். தடைகள் நீங்கும் நாள். 


magaram

மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உழைப்பால் உயரும் நாள். 


kumbamகும்பம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள். 


meenamமீனம்: கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

NO COMMENTS

LEAVE A REPLY