இன்றைய ராசிபலன் – வெள்ளி 24/06/2016

இன்றைய ராசிபலன் – வெள்ளி 24/06/2016

309
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: பூசம்


mesahamமேசம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த கூச்சல், குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனைத் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


mithunam

மிதுனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.


kadakamகடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.


simamசிம்மம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.


kanniகன்னி: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


thulamதுலாம்: இன்று நீங்கள் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். சின்ன சின்ன பிரச்னைகள் குடும்பத்தில் தலைத்தூக்கும். சிறுசிறு அவமானமும் ஏற்படக்கூடும்.  உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள். 


viruchigamவிருச்சிகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


dhanusuதனுசு: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.


magaramமகரம்: கடந்த இரண்டுநாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சியான நாள்.


kumbam

கும்பம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.


meenamமீனம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

NO COMMENTS

LEAVE A REPLY