Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 29/01/2016

இன்றைய ராசிபலன் – வெள்ளி 29/01/2016

279
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: பூரட்டாதி


mesaham

மேசம்: இன்று உங்களுக்கு சின்ன சின்ன பிரச்னைகள் குடும்பத்தில் தலைத்தூக்கும். பழைய கடன் பிரச்சனை அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை பற்றி குறைக் கூற வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.


rishabam

ரிஷபம்: இன்று நீங்கள் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை முடிப்பதில் இருந்த இழுபறி நிலை மாறும். மகிழ்ச்சி தங்கும் நாள்.


mithunamமிதுனம்: உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப் படுத்துவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


kadakamகடகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் எடுத்தெறிந்துப் பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர் களுடன் மோதல்கள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


simam

சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமை யின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


kanniகன்னி: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மரியாதைக் கூடும். பிரபலங்கள் உதவுவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். சாதிக்கும் நாள்.


thulamதுலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர் களின் வருகையால் வீடு களைகட்டும். உடல் நலம் சீராகும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.


viruchigamவிருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.


dhanusuதனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.


magaramமகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.


kumbamகும்பம்: துணிச்சலாக நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.


meenamமீனம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here