Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 4/12/2015

இன்றைய ராசிபலன் – வெள்ளி 4/12/2015

439
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.15 – 10.15  காலை – 10.30 – 12.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்


mesahamமேசம்: அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். வருமானம் உயரும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.


rishabamரிஷபம்: நட்பு வட்டம் விரியும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.


mithunamமிதுனம்: விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வராது என்றிருந்த பணம் வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.


kadakamகடகம்: இன்று நீங்கள் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். யாரையும் தூக்கி எறிந்துப் பேசாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


simamசிம்மம்: தாயாரின் உடல் நிலை சீராகும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். பழைய கடன் பிரச்னை தீரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நல்ல நாள்.


kanniகன்னி: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக் குக் கூடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்று வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.


thulamதுலாம்: சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப் படுவீர்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்துச் செல்லும். சகோதர வகையில் ஆரோக் யமான விவாதங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். ஓய்வு தேவைப்படும் நாள்.


dhanusu

தனுசு: பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மாறு பட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


magaramமகரம்: கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.


kumbamகும்பம்: நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்பு களை ஒப்படைப்பார். கவனம் தேவைப்படும் நாள்.


meenamமீனம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.