Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 01/02/2016

இன்றைய ராசிபலன் – திங்கள் 01/02/2016

459
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.30 – 7.30  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.30

சந்திராஷ்டமம்: ரேவதி


mesahamமேசம்: தெய்வ வழிபாட்டால் நன்மை வந்து சேரும். இன்று உங்கள் நிகழ்கால தேவைகள் நிறைவேறும். வழக்கு, பிரச்சனைகளில் நல்ல தீர்ப்பு வந்து சேரும். உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வராது. தொழில் முன்னேற்றத்திற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். புகழ் வந்து சேரும் நல்ல நாள்.


rishabamரிஷபம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


mithunamமிதுனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுப் படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.


kadakamகடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.


simamசிம்மம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.


kanniகன்னி: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளின் தனித்திறமை களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.


thulamதுலாம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.


viruchigamவிருச்சிகம்: அன்புத் தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


dhanusuதனுசு: இன்று நீங்கள் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். ஓய்வு தேவைப்படும் நாள்.


magaramமகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுக ளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.


meenamமீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் இங்கிதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here