Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 04/01/2016

இன்றைய ராசிபலன் – திங்கள் 04/01/2016

281
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.30- 7.30  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.30

சந்திராஷ்டமம்: ரேவதி


mesaham

மேசம்: குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து உங்கள் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். தைரியம் கூடும் நாள்.


rishabam

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

 


mithunam

மிதுனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிலும் முன்யோசனை தேவைப்படும் நாள்.

 


kadakam

கடகம்: இன்று உங்களுக்கு திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். மாலையிலிருந்து எதிர்ப்பு அடங்கும் நாள்.


simamசிம்மம்: இன்று நீங்கள் முன்கோபத்தை குறையுங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.


kanni

கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். புது பொருள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். அமோகமான நாள்.


thulam

துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்து கொள்வீர். அக்கம்-பக்கத்தினர் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர். நினைத்தது நிறைவேறும் நாள்.

 


viruchigamவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.


dhanusu

தனுசு: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சாதிக்கும் நாள்.

 


magaram

மகரம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். திட்டம் நிறைவேறும் நாள்.


kumbam

கும்பம்: தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமை யும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

 


meenamமீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். . வியாபாரம் தழைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.