Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 09/05/2016

இன்றைய ராசிபலன் – திங்கள் 09/05/2016

395
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.30 – 7.30  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.15

சந்திராஷ்டமம்: அனுஷம்


mesaham

மேசம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சாதிக்கும் நாள்.


rishabamரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


mithunam

மிதுனம்: இன்று நீங்கள் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். 


kadakam

கடகம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். கால் வலி, உடல் சோர்வு வந்து நீங்கும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


simam

சிம்மம்: இன்று நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல் லாப்பாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.


kanni

கன்னி: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங் குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். புதுமை படைக்கும் நாள்.


thulam

துலாம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். தொட்டது துலங்கும் நாள்.


viruchigam

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். மனநிறைவு கிட்டும் நாள்.


dhanusuதனுசு: சவாலான வேலைகளையும் சாதாரண மாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றி யடையும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


magaramமகரம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


kumbam

கும்பம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியம் முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர் கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். சிறப்பான நாள்.


meenamமீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அழகு, இளமைக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். தடைகள் உடைபடும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here