Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 14/03/2016

இன்றைய ராசிபலன் – திங்கள் 14/03/2016

329
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.30 – 7.30  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.30

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி


mesahamமேசம்: இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


rishabamரிஷபம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.


mithunamமிதுனம்: இன்று நீங்கள் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


kadakamகடகம்: பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.


simamசிம்மம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் தனிநபர் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.


kanniகன்னி: கடந்த இரண்டு நாளாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


thulamதுலாம்: விவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்க ளுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்காதீர்கள். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


viruchigamவிருச்சிகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.


dhanusuதனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதா யம் உண்டு. தடைகள் உடைபடும் நாள்.


magaramமகரம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும்.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


meenamமீனம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை நீங்கள் முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.