Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 16/05/2016

இன்றைய ராசிபலன் – திங்கள் 16/05/2016

634
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.30 – 7.30  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 5.15 – 6.00

சந்திராஷ்டமம்: சதயம்


mesaham

மேசம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


rishabamரிஷபம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். தாயாரின் உடல் நலம் சீராகும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயமடையும் நாள்.


mithunamமிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


kadakamகடகம்: நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


simam

சிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். நெருங்கியவர்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.


kanni

கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.


thulamதுலாம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்த வர்கள் பக்கபலமாக இருப் பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


viruchigam

விருச்சிகம்: இன்று உங்களுக்கு உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். பூரம் நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.


magaram

மகரம்: இன்று நீங்கள் வேலைச் சுமை இருந்து கொண்டே இருப்பதாக ஆதங்கப் படுவீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


kumbam

கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர் களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்-. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


meenamமீனம்: பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். உங்கள் தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here