Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 17/10/2016

இன்றைய ராசிபலன் – திங்கள் 17/10/2016

184
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.00 – 7.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 7.30 – 9.00

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை


mesahamமேசம்: இன்று உங்களுக்கு மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.
வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.


rishabamரிஷபம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும்.  பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால்  உயரும் நாள்.


mithunam

மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.


kadakam

கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில்  கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.


simamசிம்மம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு  பெருகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும்  நாள்.


kanniகன்னி: கணவன் – மனைவிக்குள் இருந்து வந்த மனப்போர் நீங்கும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


thulamதுலாம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சொத்து வாங்குவது, விற்பது சாதகமாக  முடியும். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.


viruchigam

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் நீங்கி அமைதி நிலவும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் புது  தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.


dhanusu

தனுசு: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கனிவாகப் பேசி  வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். போராடி வெல்லும் நாள்.


magaramமகரம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை  கட்டுக்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.


kumbamகும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிறப்பான நாள்.


meenamமீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். . வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here