Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 18/01/2016

இன்றைய ராசிபலன் – திங்கள் 18/01/2016

298
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.30 – 7.30  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.30

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை


mesaham

மேசம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. திடீர் யோகம் கிட்டும் நாள்.


rishabam

ரிஷபம்: உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக் கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.


mithunamமிதுனம்: சாதிக்க வேண்டு மென்ற தன்னம்பிக்கை வரும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் செழிக்கும். திடீர் திருப்பம் உண்டாகும் நாள்.


kadakamகடகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். மனநிறைவு கிட்டும் நாள்.


simamசிம்மம்: இன்று உங்களது தாழ்வு மனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.


kanni

கன்னி: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சகோதரி உதவுவார். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


thulam

துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களை சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


viruchigam

விருச்சிகம்: அன்புத் தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தில் மனத்தாங்கள் வரும். கவனமாக இருந்தால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை பெற நேரிடும். அரசியல்வாதிகளால் பிரச்சனை வந்து சேரும். வியாபாரத்தில் மற்றவர்களிடம் அமைதியான போக்கை கையாலுங்கள். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.


magaram

மகரம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


kumbam

கும்பம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


meenamமீனம்: இன்று நீங்கள் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறு விதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியா பாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here