Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 2/11/2015

இன்றைய ராசிபலன் – திங்கள் 2/11/2015

218

நல்ல நேரம்:
காலை – 6.00-7.00
மாலை – 4.45-5.45
இராகு காலம்:
காலை – 7.30-9.00
மாலை – 4.30-6.00
எமகண்டம்:
காலை – 10.30-12.00
மாலை – 3.00-4.30
குளிகை:
காலை – 1.30-3.00
மாலை – 7.30-9.00
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை


mesahamமேசம்: குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியங்கள் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எந்த செயலையும் பதறாமல் செய்தால் நன்மை உண்டாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை


rishabam

ரிஷபம்: தேவையற்ற பேச்சால் தீங்கு வந்து சேரும். மற்றவர்கள் விடயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலை விடயமாக வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நன்மை கிட்டும். தொழிலில் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை சமாளிக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


mithunam

மிதுனம்: குடும்பத்தில் மனத்தாங்கள் வரும். கவனமாக இருந்தால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை பெற நேரிடும். அரசியல்வாதிகளால் பிரச்சனை வந்து சேரும். வியாபாரத்தில் மற்றவர்களிடம் அமைதியான போக்கை கையாலுங்கள். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ரோஸ்


kadakam

கடகம்: முயன்றால் வெற்றி பெருவீர்கள். பொறாமை போட்டி அதிகரிக்கும். இன்று நீங்கள் பொருமையாக இருப்பது நல்லது. குடும்ப காரியங்களை பற்றி பிறரிடம் பேச வேண்டம். வேலையில் முயற்சி செய்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி மந்தமாக இருக்கும். மனதை ஒருமுகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


simam

சிம்மம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை


kanni

கன்னி: எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியை தேடித்தரும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு பெருகும். நல்லவர்கள் தொடர்பு கிடைக்கும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, மஞ்சள்


thulam

துலாம்: மனக் கவலை வர வாய்ப்பு உள்ளது. நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மனதில் ஒருவித அச்சம் உருவாகும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். தொழிலில் மந்தநிலை உருவாகும். பயம் இல்லாமல் இருந்தால் நன்மை ஏற்படும் நாள்.


அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: வைலட், ரோஸ்


viruchigam

விருச்சிகம்: எளிய விஷயம் கூட சுமை போல தோன்றும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றவும்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்


dhanusu

தனுசு: அடுத்தவர்கள் விடயத்தில் தலையிடாமல் தங்களது வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. உங்கள் பலம் பலவீனத்தை அறிந்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் பெரியவர்களது உடல் நிலை சீராகும். அரசு சார்ந்த வேலை கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரம் சீராக நடக்கும். சோர்வை தவிர்க்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பிங்க், இளஞ் சிவப்பு


magaram

மகரம்: மனதை ஒரு முகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிரைவவேறும். பொறாமை பொட்டி அதிகரிக்கும். முயன்றால் வெற்றி பெருவீர்கள். திடீர் செலவுகள் ஏற்படும். குடும்ப காரியங்கள் பற்றி பிறரிடம் சொல்ல வெண்டாம். தொழில் மந்தமாக அமையும். முயற்சி செய்தால் நன்மை கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


kumbam

கும்பம்: அன்பு தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, பச்சை


meenam

மீனம்: குடும்பத்தில் பெரியவர்களின் உடல்நிலை சீராகும். எதிலும் தெளிவான நிலை ஏற்படாமல் குழப்பம் உண்டாகும். அரசு சார்ந்த வேலைகள் பெற நல்ல சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நன்மை கிடைக்கும். சோர்வை தவிர்க்க வேண்டிய நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை