Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 20/06/2016

இன்றைய ராசிபலன் – திங்கள் 20/06/2016

454
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.30 – 7.30  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 5.10 – 6.00

சந்திராஷ்டமம்: ரோகிணி


mesaham

மேசம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


rishabam

ரிஷபம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவது குறித்து யோசிப்பீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. அமோகமான நாள்.


mithunam

மிதுனம்: எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பழைய பிரச்னைகள் மீண்டும் தலைத்தூக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.


kadakam

கடகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப் படும். பிள்ளைகள் உங் கள் அறிவுரையை ஏற் றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


simam

சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடிவடையும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உற்சாகமான நாள்.


kanni

கன்னி: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதி கரிக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


thulam

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். வெற்றி பெறும் நாள்.


viruchigam

விருச்சிகம்: மனதிலே சின்ன சின்ன சஞ்சலங்கள், எதிலும் பிடிப்பற்ற நிலை, ஆர்வமின்மை வந்துப் போகும். குடும்பத்தினருடன் இணக்கமாக செல்லவும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியக் கூடும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


dhanusu

தனுசு: கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலை பேசியில் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான  விவாதங்கள் வரக்கூடும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


magaram

மகரம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிக ரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் லாபம் வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


kumbam

கும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். இனிமையான நாள்.


meenam

மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here