இன்றைய ராசிபலன் – திங்கள் 30/05/2016

இன்றைய ராசிபலன் – திங்கள் 30/05/2016

417
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.00 – 5.30

சந்திராஷ்டமம்: மகம், பூரம்


mesaham

மேசம்: பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.


rishabamரிஷபம்: இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


mithunamமிதுனம்: இன்று உங்களுக்கு எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும்.

உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.  


kadakamகடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.


simamசிம்மம்: இன்று நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.


kanniகன்னி: இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும்.

அவசரப்பட்டு அடுத்தவர்களை  விமர்சிக்க வேண்டாம். மரியாதைக் குறைவாக சின்ன சின்ன சம்பவங்கள் அவ்வப்போது நிகழும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும்.  விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.


thulam

துலாம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புதுப்பொருள் சேரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.


dhanusu

தனுசு: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். சகோதரி ஒத்துழைப்பார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். புதுமை படைக்கும் நாள்.


magaramமகரம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேச வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


kumbamகும்பம்: இன்றையதினம் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


meenamமீனம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.

NO COMMENTS

LEAVE A REPLY