Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 30/11/2015

இன்றைய ராசிபலன் – திங்கள் 30/11/2015

224
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.15 – 7.15  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.45 – 5.45

சந்திராஷ்டமம்: மூலம்


mesahamமேசம்: சங்கடங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று நீங்கள் எல்லோரும் பாராட்டும்படி நற்செயல் புரிவீர்கள். கணவன் மனைவிக்குள் இன்பம் பெருக்கெடுத்து ஓடும். குடும்பம், உறவினர்களிடம் உங்கள் மதிப்பு கூடும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். மகிழ்ச்சியான நாள்.


rishabamரிஷபம்: முக்கிய விடயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. புதிய முயற்ச்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்கள் நிறை, குறைகளை குடும்பத்தார் எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தரவேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை காப்பது நல்லது. எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.


mithunamமிதுனம்: மனக் கவலை வர வாய்ப்பு உள்ளது. நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மனதில் ஒருவித அச்சம் உருவாகும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழிலில் மந்தநிலை உருவாகும். பயம் இல்லாமல் இருந்தால் நன்மை ஏற்படும் நாள்.


kadakamகடகம்: முயன்றால் வெற்றி பெருவீர்கள். பொறாமை போட்டி அதிகரிக்கும். இன்று நீங்கள் பொருமையாக இருப்பது நல்லது. குடும்ப காரியங்களை பற்றி பிறரிடம் பேச வேண்டம். வேலையில் முயற்சி செய்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி மந்தமாக இருக்கும். மனதை ஒருமுகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேரும் நல்ல நாள்.


simamசிம்மம்: பணவரவை விட செலவு அதிகரிக்கும். எந்த காரியங்களை எடுத்தாலும் பொறுமையுன் செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் மந்த நிலை ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்த்து பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

 


kanniகன்னி: கணவன்-மனைவி இடையே அன்பு செலுத்தி மகிழ்வீர்கள். உடல் நலம் சுகப்படும். உங்கள் அறிவு திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். திடீர் முடிவு எடுப்பீர்கள். அன்னியர்கள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் சேர்க்க நல்ல யோகம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். நல்லவர்கள் தொடர்பால் நன்மை பெருகும் நல்ல நாள்.


thulamதுலாம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.


viruchigamவிருச்சிகம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உயர்வுக்கு சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.


dhanusu

தனுசு: நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். அறிவு, தகுதியை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.


magaramமகரம்: தெய்வ வழிபாட்டால் நன்மை வந்து சேரும். இன்று உங்களது நிகழ்கால தேவைகள் நிறைவேறும். வழக்கு, பிரச்சனைகளில் நல்ல தீர்ப்பு வந்து சேரும். உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வராது. தொழில் முன்னேற்றத்திற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். புகழ் வந்து சேரும் நல்ல நாள்.


kumbamகும்பம்: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உத்யோகத்தில் புதிய திருப்பம் உணடாகும். வியாபாரதில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.


meenamமீனம்: குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியங்கள் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எந்த செயலையும் பதறாமல் செய்தால் நன்மை உண்டாகும் நல்ல நாள்.