Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 7/12/2015

இன்றைய ராசிபலன் – திங்கள் 7/12/2015

340
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.15 – 10.15  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.45 – 5.45

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி


mesahamமேசம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். நீங்கள் செய்யும் சிறிய காரியம் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். உடல் நலம் சுகப்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிடைக்கும். பணவரவு அதிகமாகும். பயணங்கள் பலன் தரும். நன்மைகள் நடைபெறும் நல்ல நாள்.


rishabamரிஷபம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நேர்மையாக இருந்தால் நன்மை வந்து சேரும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். அரசு சார்ந்த வேலைகள் பெற உகந்த சூழ்நிலை உருவாகும். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். சிறப்பான நாள்.


mithunamமிதுனம்: வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியம் கூட பலமடங்கு நன்மை தரும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னெற்றம் ஏற்படும். பாராட்டு மழையில் நனையும் நல்ல நாள்.


kadakamகடகம்: அன்புத் தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


simamசிம்மம்: நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வந்து சேரும். செயலில் வேகம் காட்டுவீர்கள். நீண்ட நாள் முடியாத காரியம் புதிய முயற்சியால் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். பெண்களால் செலவு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். நன்மைகள் நடக்கும் நல்ல நாள்.


kanniகன்னி: அதிக அலைச்சல் இல்லாமல் ஓய்வு எடுப்பது நல்லது. பயணச் செலவு ஏற்படும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணவரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்திற்குள் வீண் சந்தேகங்களை தவிர்க்க வேண்டிய நாள்.


thulamதுலாம்: நீண்ட நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். திடீர் பயணம் நன்மையில் முடியும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு இருக்கும். உறவினர்களிடம் முன்பு கேட்ட உதவிகள் தற்போது வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கருத்து மேலோங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நன்மைகள் நடைபெறும் நல்ல நாள்.


viruchigamவிருச்சிகம்: பெற்றோரின் ஆசைகளை நிறைவெற்றுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் அந்தஸ்த்து உயரும். ஆன்மீக பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். நன்மதிப்பு கூடும் நல்ல நாள்.


dhanusu

தனுசு: அறிவு, திறமையை மெம்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அன்னியர்கள், நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். துணிவுடன் செயல்படுவீர்கள். முயற்சிகள் திருவினையாகும் நல்ல நாள்.


magaramமகரம்: முக்கிய விடயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உங்கள் நிறை, குறைகளை குடும்பத்தார் எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். உத்யோகத்தில் யாரையும் நம்பி உறுதிமொழி தரவேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை காப்பது நல்லது. புதிய முயற்சிகள் தாமதமாக முடியும் நாள்.


kumbamகும்பம்: அடுத்தவர்கள் விடயத்தில் தலையிடாமல் தங்களது வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. உங்கள் பலம் பலவீனத்தை அறிந்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் பெரியவர்களது உடல் நிலை சீராகும். அரசு சார்ந்த வேலை கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரம் சீராக நடக்கும். சோர்வை தவிர்க்க வேண்டிய நாள்.


meenamமீனம்: குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். இன்று உங்கள் வளர்ச்சிக்கு நீங்களே தடை போடும் நாள். தேவையில்லாத பேச்சினை குறைத்துக்கொள்வது நல்லது. உத்யோகத்தில் மறைமுக தடங்கல் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் மனஅழுத்தம் ஏற்படும். எதிலும் பொறுமை தேவைப்படும் நல்ல நாள்.