Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 23/11/2015

இன்றைய ராசிபலன் – திங்கள் 23/11/2015

230
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 6.15 – 7.15 காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: உத்திரம்


mesahamமேசம்: பணவரவை விட செலவு அதிகரிக்கும். எந்த காரியங்களை எடுத்தாலும் பொறுமையுன் செயல்படுவது நல்லது. வெளியில் செல்லாமல் வீட்டில் ஓய்வு எடுப்பது நல்லது. உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் மந்த நிலை ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்த்து பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.


rishabam

ரிஷபம்: மனக் கவலை வர வாய்ப்பு உள்ளது. நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மனதில் ஒருவித அச்சம் உருவாகும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். தொழிலில் மந்தநிலை உருவாகும். பயம் இல்லாமல் இருந்தால் நன்மை ஏற்படும் நாள்.

 


mithunam

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சகோதர, சகோதரிகள் பாசமாக இருப்பார்கள். புதியவர்களிடம் அதிகம் பேச வெண்டாம். வேலைகளில் இருந்த தடைகள் மாரும். வியாபரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனக் கவலை நீங்கி தெளிவு பிறக்கும் நல்ல நாள்.


kadakam

கடகம்: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உத்யோகத்தில் புதிய திருப்பம் உணடாகும். வியாபாரதில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.


simam

சிம்மம்: கணவன், மனைவிக்குள் சந்தேகம் நீங்கி மகிழ்ச்சி பெருவீர்கள். பெரியோர்களிடம் பணிவுடன் நடந்துகொண்டு அவர்களது ஆசியினை பெருவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.


kanni

கன்னி: நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வந்து சேரும். செயலில் வேகம் காட்டுவீர்கள். நீண்ட நாள் முடியாத காரியம் புதிய முயற்சியால் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். பெண்களால் செலவு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். நன்மைகள் நடக்கும் நல்ல நாள்.


thulam

துலாம்: முக்கிய விடயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்கள் நிறை, குறைகளை குடும்பத்தார் எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தரவேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை காப்பது நல்லது. எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.


viruchigam

விருச்சிகம்: எதிரிகள் தொந்திரவு குறைந்து அமைதி கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். புதிய உலகத்தை பார்பீர்கள். சகோதர, சகோதரிகள் பக்க பலமாக இருபார்கள். தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உத்யோகத்தில் நீங்கள் விரும்பிய மாற்றம் நடக்கும். வியாபாரதில் வளர்ச்சி உண்டாகும். சிறப்பான நாள்.


dhanusu

தனுசு: கல்யாண பேச்சுவார்த்தை தடையுடன் முடிவாகும். வேலைகள் செய்து முடிக்க தாமதம் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். உறவினர்கள், நண்பர்களிடம் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். தொழிலில் சில தடைகள் ஏற்படலாம். சாமர்த்தியம் தேவைப்படும் நல்ல நாள்.


magaram

மகரம்: சங்கடங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று நீங்கள் எல்லோரும் பாராட்டும்படி நற்செயல் புரிவீர்கள். கணவன் மனைவிக்குல் இன்பம் பெருக்கெடுத்து ஓடும். குடும்பம், உறவினர்களிடம் உங்கள் மதிப்பு கூடும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். மகிழ்ச்சியான நாள்.


kumbam

கும்பம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நேர்மையாக இருந்தால் நன்மை வந்து சேரும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். அரசு சார்ந்த வேலைகள் பெற உகந்த சூழ்நிலை உருவாகும். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து செரும் நல்ல நாள்.


meenam

மீனம்: வராது என்று நினைத பணம் வந்து சேரும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியம் கூட பலமடங்கு நன்மை தரும்.மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னெற்றம் ஏற்படும். பாராட்டு மழையில் நனையும் நல்ல நாள்.