Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 02/01/2016

இன்றைய ராசிபலன் – சனி 02/01/2016

373
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி


mesahamமேசம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்களின் ஆதரவுப் பெருகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


rishabamரிஷபம்: தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். நீங்கள் யதார்த்தமாக பேசுவதைக் கூட சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துக் கொண்டு உங்களை விமர்சிப்பார்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.


mithunamமிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தாமதமானாலும் எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


kadakamகடகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.


simamசிம்மம்: இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.


kanniகன்னி: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.


thulamதுலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும்.


viruchigamவிருச்சிகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


dhanusuதனுசு: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


magaramமகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி தெளிவுப் பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


meenamமீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். தோற்றப் பொலிவுக் கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here