Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 05/03/2016

இன்றைய ராசிபலன் – சனி 05/03/2016

430
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை


mesaham

மேசம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


rishabam

ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கவனம் தேவைப்படும் நாள்.


mithunamமிதுனம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


kadakamகடகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். காணாமல் போன ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அனுபவ அறிவால் வெல்லும் நாள்.


simamசிம்மம்: இன்று நீங்கள் முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்து
வது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.


thulamதுலாம்: முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள்.எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும்.வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அண்டை,
அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.


dhanusuதனுசு: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


magaramமகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். மற்றவர்
களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தொட்டது துலங்கும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.


meenamமீனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here