Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 06/02/2016

இன்றைய ராசிபலன் – சனி 06/02/2016

391
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை


mesahamமேசம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக் கும். புதுப் பொருள் சேரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


rishabamரிஷபம்: கடந்த இரண்டு நாட் களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.


mithunamமிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். புது வேலைக் கிடைக்கும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.


kadakamகடகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் மோதல்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


simamசிம்மம்: இன்று நீங்கள் சந்தேகப் படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.


kanniகன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.


thulamதுலாம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உய ரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


viruchigamவிருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


dhanusuதனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படு வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டா ரின் அன்புத் தொல்லை குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.


magaramமகரம்: எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண் டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.


kumbamகும்பம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.


meenamமீனம்: இன்று உங்கள் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.