இன்றைய ராசிபலன் – சனி 18/06/2016

இன்றைய ராசிபலன் – சனி 18/06/2016

504
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: பரனி


mesaham

மேசம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


rishabamரிஷபம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேச வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


mithunam

மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.  


kadakam

கடகம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


simam

சிம்மம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.


kanni

கன்னி: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


thulam

துலாம்: இன்று உங்களுக்கு வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.


viruchigam

விருச்சிகம்: சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


dhanusuதனுசு: இன்றையதினம் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


magaramமகரம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.


kumbamகும்பம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


meenamமீனம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

NO COMMENTS

LEAVE A REPLY