Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 12/12/2015

இன்றைய ராசிபலன் – சனி 12/12/2015

181
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.45 – 8.45  காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: ரோகிணி


mesahamமேசம்: எதையும் உற்சாகமாக செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உண்டாகும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


mithunamமிதுனம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்தை முடிக்கும் நாள்.


kadakamகடகம்: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். அரசு அதிகாரி
களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


simamசிம்மம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.


thulamதுலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பிரியமானவர்
களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். புது திட்டங்கள் நிறைவேறும் நாள்.


viruchigamவிருச்சிகம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பி கள் உதவுவார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள் அலுவலகத்தில் மரியாதைக்கூடும். இனிமையான நாள்.


dhanusu

தனுசு: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


magaram

மகரம்: இன்றைய தினம் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


kumbamகும்பம்: இன்று நீங்கள் சிக்கனமாக இருக்க
வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

 


meenamமீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்
களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.