Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 13/02/2016

இன்றைய ராசிபலன் – சனி 13/02/2016

347
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்


mesaham

மேசம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.


rishabam

ரிஷபம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.


mithunam

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


kadakam

கடகம்: இன்று நீங்கள் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


simam

சிம்மம்: இன்று உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். முன் கோபத்ததை தவிர்க்கப் பாருங்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும்.  உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


kanni

கன்னி: பழைய பிரச்னைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


thulam

துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.


viruchigam

விருச்சிகம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


dhanusu

தனுசு: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


magaram

மகரம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


kumbam

கும்பம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


meenamமீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here