Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 13/08/2016

இன்றைய ராசிபலன் – சனி 13/08/2016

293
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.45 – 8.45  காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை


mesahamமேசம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித்தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நிம்மதியான நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த
உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். ஓய்வு தேவைப்படும் நாள்.


mithunam

மிதுனம்: இன்று நீங்கள் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.


kadakamகடகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


simamசிம்மம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வெளிவட்டாரத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


kanni

கன்னி: இன்று நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் ஒன்றாகவும், நடப்பது வேறொன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. போராட்டமான நாள்.


thulam

துலாம்: இன்று நீங்கள் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


viruchigamவிருச்சிகம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார். கனவு நனவாகும் நாள்.


dhanusu

தனுசு: இன்று நீங்கள் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். . வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.


magaramமகரம்: பிள்ளைகள் உங்கள் அறிவரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரி உதவுவார். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.


meenam

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.