Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 16/01/2016

இன்றைய ராசிபலன் – சனி 16/01/2016

370
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 5.30 – 6.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: உத்திரம்


mesahamமேசம்: எதிர்ப்புகள் அடங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் மோதல்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தி னர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


mithunamமிதுனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.


kadakamகடகம்: புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.


simamசிம்மம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.


kanniகன்னி: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்பு, மரியாதைக் கூடும் நாள்.


thulamதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உத வுவார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


viruchigamவிருச்சிகம்: இன்று உங்களுக்கு சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. வியாபாரத்தில் யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


dhanusuதனுசு: புதிய சிந்தனைகள் மனதில் தோன் றும். பிள்ளைகளின் பொறு ப்புணர்வு அதிகமாகும். சிக்கனமாக செலவழி த்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.


magaramமகரம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.


kumbamகும்பம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


meenamமீனம்: இன்று உங்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனு சரித்துப் போங்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here