Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 19/03/2016

இன்றைய ராசிபலன் – சனி 19/03/2016

283
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்


mesahamமேசம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.


rishabamரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.


mithunamமிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தொட்டது துலங்கும் நாள்.


kadakam

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.


simamசிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள். சாதிக்கும் நாள்.


kanniகன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சில
வற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


thulamதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகள் உடைபடும் நாள்.


viruchigamவிருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


dhanusuதனுசு: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.


magaram

மகரம்: இன்று நீங்கள் சந்தேகப்படுவதை தவிர்க்க பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


kumbam

கும்பம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.


meenamமீனம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here