Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 19/12/2015

இன்றைய ராசிபலன் – சனி 19/12/2015

241
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.45 – 11.45  காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: மகம், பூரம்


mesahamமேசம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


mithunamமிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இங்கிதமாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.


kadakamகடகம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்த்து உயரும். முக்கிய சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்யோகத்தில் உங்களை  நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சிறப்பான நாள்.


simamசிம்மம்: இன்று நீங்கள் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பயத்தை தவிர்த்தால் மகிழ்ச்சி தங்கும் நாள்.

 


kanniகன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். கனவு நனவாகும் நாள்.


thulamதுலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.


viruchigamவிருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


dhanusu

தனுசு: இன்று நீங்கள் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.


magaramமகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


kumbamகும்பம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.


meenamமீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். சகோதரங்கள் அதிருப்தி அடைவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here