Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 20/02/2016

இன்றைய ராசிபலன் – சனி 20/02/2016

445
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: மூலம்


mesahamமேசம்: இன்று நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கடினமாக உழைக்க வேண்டிய நாள்.


rishabamரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். புதுத் தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியடையும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.


mithunamமிதுனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின்நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.


kadakamகடகம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


simamசிம்மம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்து போகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


thulamதுலாம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.


viruchigam

விருச்சிகம்: இன்று நீங்கள் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


dhanusu

தனுசு: உணர்ச்சிபூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். உற்சாகமான நாள்.


magaramமகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


kumbamகும்பம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.


meenamமீனம்: பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here