Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 26/03/2016

இன்றைய ராசிபலன் – சனி 26/03/2016

250
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: ரேவதி


mesahamமேசம்: இன்று நீங்கள் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்ய போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


rishabamரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்கூடும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.


mithunamமிதுனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


kadakam

கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பழைய சொத்து சிக்கலில் ஒன்று தீரும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.


simam

சிம்மம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.


thulamதுலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


viruchigamவிருச்சிகம்: இன்று உங்களுக்கு வீண்டென்ஷன் வந்து போகும். நண்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் வரும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.


dhanusuதனுசு: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


magaramமகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.


kumbam

கும்பம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


meenamமீனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here