Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 27/02/2016

இன்றைய ராசிபலன் – சனி 27/02/2016

308
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி


mesahamமேசம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். எதிர்பாராத நன்மைகள் கிட்டும் நாள்.


rishabamரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கோபம் குறையும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


mithunamமிதுனம்: இன்று நீங்கள் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துச் செல்லும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம்.  வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


kadakamகடகம்: எதையும் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். சகோதரங்களால் உதவிகள் உண்டு. நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புகழ், கௌரவம் கூடும் நாள்.


simamசிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.


thulamதுலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அண்டை,
அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.


dhanusuதனுசு: கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


magaramமகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.


kumbamகும்பம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். மகளுக்கு நல்ல வரன் அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


meenamமீனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.