இன்றைய ராசிபலன் – சனி 27/08/2016

இன்றைய ராசிபலன் – சனி 27/08/2016

179
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.45 – 8.45  காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: விசாகம், அனுசம்


mesahamமேசம்: கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்கள் வந்துப் போகும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உடல் நலம் பாதிக்கும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.


mithunamமிதுனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.

அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


kadakamகடகம்: உங்களிடம் இருக்கும் சின்ன சின்ன பலவீனங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சிறப்பான நாள்.


simamசிம்மம்: ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


kanniகன்னி: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும்.

உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.


thulam

துலாம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


viruchigamவிருச்சிகம்: கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை மூலம் தீர்வு காண்பீர்கள். பால்யநண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மகிழ்ச்சியான நாள்.


dhanusuதனுசு: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


magaramமகரம்: இன்று நீங்கள் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


meenamமீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். வீடு, வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

NO COMMENTS

LEAVE A REPLY