Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 28/01/2017

இன்றைய ராசிபலன் – சனி 28/01/2017

111
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30  
மாலை – 4.30 – 5.30    மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்


mesahamமேசம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள். 


rishabamரிஷபம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சொந்தபந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


mithunamமிதுனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வு நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனநிறைவு கிட்டும் நாள். 


kadakamகடகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.


simamசிம்மம்: மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


kanniகன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம் பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங் குவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள். 


thulamதுலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள். 


viruchigamவிருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார் கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொந்த-பந்தங்கள் மத்தி யில் மதிக்கப்படுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.


dhanusuதனுசு: கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறுசிறு அவமானங்களை நினை த்து தூக்கம் குறையும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


magaramமகரம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


kumbamகும்பம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டதை வாங்கித் தருவீர் கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறு ப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். 


meenamமீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here