Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 30/01/2016

இன்றைய ராசிபலன் – சனி 30/01/2016

387
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.00  காலை – 9.00 – 10.30
மாலை – 3.00 – 4.00  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி


mesahamமேசம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


rishabam

ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


mithunamமிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். முயற்சியால் முன்னேறும் நாள்.


kadakamகடகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் விலகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


simamசிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


kanniகன்னி: பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


thulam

துலாம்: எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.


dhanusuதனுசு: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


magaram

மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.


kumbamகும்பம்: இன்றைய தினம் பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை யுணர்வுடன் செயல்படுவார்கள். உத் யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக் கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


meenamமீனம்: இன்று உங்கள் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here