Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 30/04/2016

இன்றைய ராசிபலன் – சனி 30/04/2016

436
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்


mesaham

மேசம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


mithunam

மிதுனம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு விலகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள். 


kadakam

கடகம்: இன்று உங்களுக்கு சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்.  உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.


simam

சிம்மம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


kanni

கன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


thulam

துலாம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். தொட்டது துலங்கும் நாள்.


viruchigam

விருச்சிகம்: இன்று உங்களுக்கு வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.


dhanusuதனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.


magaramமகரம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணவரவு திருப்தி தரும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.


kumbamகும்பம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.  யோகா,  தியானம்
என மனம் செல்லும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள் உழைப்பால் உயரும் நாள்.


meenamமீனம்: சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here