Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 5/12/2015

இன்றைய ராசிபலன் – சனி 5/12/2015

563
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.45 – 8.45  காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்


mesahamமேசம்: இன்று சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நல்ல நாள்.


rishabamரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதிகாரிகள் உங்களை அங்கீகரிப்பார்கள். போராட்டமான நாள்.


mithunamமிதுனம்: இன்று உங்களது இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


kadakamகடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


simamசிம்மம்: வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன சாதனங்கள் வாங்குவர்கள். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


kanniகன்னி: விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.


thulamதுலாம்: நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். அறிவு, தகுதியை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.


viruchigamவிருச்சிகம்: எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


dhanusu

தனுசு: பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அழகு, இளமைக் கூடும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மகிழ்ச்சியான நாள்.


magaramமகரம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.


kumbamகும்பம்: உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். எந்தப் பிரச்னைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.


meenamமீனம்: திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.