Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 7/11/2015

இன்றைய ராசிபலன் – சனி 7/11/2015

156
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 7.45-8.45 காலை – 9.00-10.30 காலை – 1.00-3.00 காலை – 6.00 – 7.30
மாலை – 4.45-5.45 மாலை – 3.00 – 4.30 மாலை – 7.30-9.00 மாலை – 10.30-12.00

சந்திராஷ்டமம்: அவிட்டம்


mesahamமேசம்: முக்கிய வேலைகளை நீங்களே நேரில் சென்று முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் பலன் தரும். ஆண்மீகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரம் சீர் பெற்று சிறக்கும். நற்பெயர் கிடைக்கும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்


rishabam

ரிஷபம்: தேவையற்ற பேச்சால் தீங்கு வந்து சேரும். மற்றவர்கள் விடயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலை விடயமாக வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நன்மை கிட்டும். தொழிலில் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை சமாளிக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


mithunam

மிதுனம்: நீண்ட நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். திடீர் பயணம் நன்மையில் முடியும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு இருக்கும். உறவினர்களிடம் முன்பு கேட்ட உதவிகள் தற்போது வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கருத்து மேலோங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நன்மைகள் நடைபெரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: சில்வர், கிரே


kadakam

கடகம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நேர்மையாக இருந்தால் நன்மை வந்து சேரும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். அரசு சார்ந்த வேலைகள் பெற உகந்த சூழ்நிலை உருவாகும். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, ஊதா


simam

சிம்மம்: கணவன், மனைவிக்குள் சந்தேகம் நீங்கி மகிழ்ச்சி பெருவீர்கள். பெரியோர்களிடம் பணிவுடன் நடந்துகொண்டு அவர்களது ஆசியினை பெருவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்


kanni

கன்னி: கல்யாண பேச்சுவார்த்தை தடையுடன் முடிவாகும். வேலைகள் செய்து முடிக்க தாமதம் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். உறவினர்கள், நண்பர்களிடம் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். தொழிலில் சில தடைகள் ஏற்படலாம். சாமர்த்தியம் தேவைப்படும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: ரோஸ், கிளிப் பச்சை


thulam

துலாம்: அன்புத் தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, பச்சை


viruchigam

விருச்சிகம்: பெற்றோரின் ஆசைகளை நிறைவெற்றுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் அந்தஸ்த்து உயரும். இரக்க குணம் பெருகும். ஆன்மீக பெரியொர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். நன்மதிப்பு கூடும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா


dhanusu

தனுசு: பணவரவை விட செலவு அதிகரிக்கும். எந்த காரியங்களை எடுத்தாலும் பொறுமையுன் செயல்படுவது நல்லது. குடும்ப காரியங்கள் பற்றி பிறரிடம் விவாதிக்க வேண்டாம். உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் மந்த நிலை ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்த்து பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம் பிங்க்


magaram

மகரம்: அடுத்தவர்கள் விடயத்தில் தலையிடாமல் தங்களது வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. உங்கள் பலம் பலவீனத்தை அறிந்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் பெரியவர்களது உடல் நிலை சீராகும். அரசு சார்ந்த வேலை கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரம் சீராக நடக்கும். சோர்வை தவிர்க்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பிங்க், இளஞ் சிவப்பு


kumbam

கும்பம்: உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை பெற நேரிடும். குடும்பத்தில் மனத்தாங்கள் வரும். கவனமாக இருந்தால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அரசியல்வாதிகளால் பிரச்சனை வந்து சேரும். வியாபாரத்தில் மற்றவர்களிடம் அமைதியான போக்கை கையாலுங்கள். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ரோஸ்


meenam

மீனம்: குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சோதனை நாளாக அமையும். தெய்வ வழிபாட்டால் நன்மைகள் பெறலாம். உத்யோகத்தில் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகலாம். வியாபாரத்தில் சிக்கல்கள் உருவாகும். சோதனையால் சோர்வு ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: ப்ரவுன், மஞ்சள்