இன்றைய ராசிபலன் – ஞாயிறு 05/06/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 05/06/2016

429
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 8.00 – 9.00
மாலை – 3.30 – 4.30  மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்


mesahamமேசம்: இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அடுத்தவர்கள் மனசு  காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய  நாள்.


rishabam

ரிஷபம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பழைய உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள்.  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. புதுமை படைக்கும் நாள்.


mithunamமிதுனம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.

பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர்  உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம்  கிட்டும் நாள்.


kadakam

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  உறவினர்களின் ஆதரவுக் கிட்டும்.  வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


simamசிம்மம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடனைத் தீர்க்க  முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

பொதுக்  காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம்  கூடும் நாள்.


thulamதுலாம்: இன்று உங்களுக்கு வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. பழைய கடன்  பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். சிக்கனம்  தேவைப்படும் நாள். 


viruchigam

விருச்சிகம்: இன்று நீங்கள் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.


dhanusuதனுசு: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.  வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நன்மை கிட்டும்  நாள்.


magaramமகரம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். விலை உயர்ந்தப்  பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி  முன்னேறும் நாள்.


kumbam

கும்பம்: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். அரசு  காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.


meenamமீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவரின் நட்பால்  உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது  அத்தியாயம் தொடங்கும் நாள்.

NO COMMENTS

LEAVE A REPLY