Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 07/02/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 07/02/2016

486
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.00
மாலை – 3.30 – 4.30 மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்


mesahamமேசம்: வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிறப்பான நாள்.


rishabamரிஷபம்: இன்று நீங்கள் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


mithunam

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.


kadakamகடகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.


simam

சிம்மம்: இன்று நீங்கள் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும்.தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

 


kanni

கன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. எதிலும் முன்யோசனை தேவைப்படும் நாள்.


thulam

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


viruchigam

விருச்சிகம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அமோகமான நாள்.


magaram

மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.


kumbamகும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை அமையும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


meenamமீனம்: இன்று நீங்கள் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.