Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 08/05/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 08/05/2016

301
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30
மாலை – 3.30 – 4.30  மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: விசாகம்


mesaham

மேசம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். தடைப்பட்ட வேலைகள் முடியும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


rishabam

ரிஷபம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.


mithunam

மிதுனம்: இன்று உங்கள் மனதில் இனம்புரியாத பயம் வந்துப்போகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


kadakam

கடகம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நாடிவந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.


simam

சிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். மதியம் 2 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


kanni

கன்னி: பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் அலைச்சல் ஏற்படும். நண்பர்கள் உதவுவார்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


thulam

துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள். 


viruchigam

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தொட்டது துலங்கும் நாள்.


dhanusuதனுசு: மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். நட்பு வட்டம் விரியும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். மதியம் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.


magaram

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்ேயாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.


kumbam

கும்பம்: இன்று உங்களுக்கு உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். பரணி நட்சத்திரக்காரர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


meenamமீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here