Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 10/01/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 10/01/2016

309
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30
மாலை – 3.30 – 4.30 மாலை – 4.30 – 06.00  மாலை – 12.00 – 01.30

சந்திராஷ்டமம்: திருவாதிரை


mesahamமேசம்: திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


rishabamரிஷபம்: நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


mithunamமிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவு களால் சேமிப்புகள் கரையும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.


kadakamகடகம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். தைரியம் கூடும் நாள்.


simamசிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.


kanniகன்னி: எதிர்பார்த்த வேலை தடையின்றி முடியும். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


thulamதுலாம்: இன்று உங்களுக்கு சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாக வும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.

 


viruchigamவிருச்சிகம்: இன்று நீங்கள் ஒரே நேரத்தில் 2,3 வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். சிலர் உங்களிடம் நயமாக பேசினாலும் சொந்த விஷயங் களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். தானுண்டு வேலை யுண்டு என இருக்க வேண்டிய நாள்.


dhanusu

தனுசு: உங்கள் குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.


magaram

மகரம்: கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களா வார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் சாதக மான தீர்ப்பு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.


meenamமீனம்: எதையும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here