Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 13/03/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 13/03/2016

272
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30
மாலை – 3.30 – 4.30 மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை


mesahamமேசம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் ஒன்று முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப் பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


rishabamரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரங்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்
கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.


mithunamமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


kadakamகடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். கனவு நனவாகும் நாள்.


simamசிம்மம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


kanniகன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்கள் அறிமுக
மாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.


thulamதுலாம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களை நம்பி சிலர் பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.


viruchigamவிருச்சிகம்: உணர்ச்சிவேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வாகனம் பழுதாகும். சுபச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.


dhanusuதனுசு: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


magaramமகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். உற்சாகமான நாள்.


kumbam

கும்பம்: இன்று உங்களை சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சி வசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


meenam

மீனம்: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here