Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 13/12/2015

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 13/12/2015

189
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.45 – 8.45
மாலை – 4.45 – 5.45  மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம்


mesahamமேசம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஆதரிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


rishabamரிஷபம்: முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் மோதல் வரக்கூடும். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபம் அடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


mithunamமிதுனம்: கடந்த இரண்டு நாளாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங் கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


kadakamகடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்து ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


simamசிம்மம்: கடந்த சில நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.


kanniகன்னி: இன்று நீங்கள் எதிர் பார்த்தவை தாமதமாகும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரி குறை கூறுவார். வேலைச்சுமை மிகுந்த நாள்.


thulamதுலாம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலனளிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.


viruchigamவிருச்சிகம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


dhanusu

தனுசு: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்களின் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திக்கலாம். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். உற்சாகமான நாள்.


magaram

மகரம்: இன்று நீங்கள் வெளுத்த தெல்லாம் பாலாக நினைத்து பேசி சிலரிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் இருப்பவர் களுடன் வளைந்து கொடுத்து போங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


kumbamகும்பம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.


meenamமீனம்: உங்கள் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்து கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.