Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 14/02/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 14/02/2016

341
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.00 – 7.00
மாலை – 3.30 – 4.30 மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: ஹஸ்தம்


mesahamமேசம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.  வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


rishabamரிஷபம்: இன்று உங்களுக்கு மனக்கவலை வந்து செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


mithunamமிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


kadakamகடகம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.


simamசிம்மம்: இன்று நீங்கள் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


kanniகன்னி: இன்று நீங்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. உற்சாகமான நாள்.


thulam

துலாம்: இன்று நீங்கள் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வேலைச்சுமை மிகுந்த நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.


dhanusuதனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


magaramமகரம்: உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.


kumbamகும்பம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும்.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.


meenamமீனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.