Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 15/11/2015

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 15/11/2015

187
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 7.45 – 8.45
மாலை – 3.15 – 4.15  மாலை 4.30 – 6.00 மாலை – 12.00 -1.30 மாலை- 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி


mesaham

மேசம்: இன்று நீங்கள் நினைத்தது நடக்கும். குடும்பத்தில் பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள். எந்தவொரு விசயத்திலும் தெளிவாக செயல்படுவது நல்லது. மனதில் மகிழ்ச்சி தங்கும். உத்யோகத்தில் உங்களது அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியம் தேவைப்படும் நல்ல நாள்.


rishabam

ரிஷபம்:  பல நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் தற்போது முடியும். கடினமான வேலைகளையும் சர்வ சாதாரனமாக முடிப்பீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்று உயர்வீர்கள். தொழிலில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. விவேகத்துடன் செயல்பட வேண்டிய நல்ல நாள்.


mithunam

மிதுனம்: தேவையற்ற பேச்சால் தீங்கு வந்து சேரும். மற்றவர்கள் விடயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலை விடயமாக வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நன்மை கிட்டும். தொழிலில் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை சமாளிக்க வேண்டிய நாள்.


kadakam

கடகம்:பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்களை நினைத்து பெற்றோர் பெருமைகொள்வார்கள். உறவினர்களிடம் மதிப்பு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மனதில் மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.


simam

சிம்மம்: கணவன், மனைவிக்குள் சந்தேகம் நீங்கி மகிழ்ச்சி பெருவீர்கள். பெரியோர்களிடம் பணிவுடன் நடந்துகொண்டு அவர்களது ஆசியினை பெருவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.


kanni

கன்னி: முயன்றால் வெற்றி பெருவீர்கள். பொறாமை போட்டி அதிகரிக்கும். இன்று நீங்கள் பொருமையாக இருப்பது நல்லது. குடும்ப காரியங்களை பற்றி பிறறிடம் பேச வேண்டம். வேலையில் முயற்சி செய்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி மந்தமாக இருக்கும். மனதை ஒருமுகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேரும் நல்ல நாள்.


thulam

துலாம்: குடும்பத்தில் மனத்தாங்கள் வரும். கவனமாக இருந்தால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை பெற நேரிடும். அரசியல்வாதிகளால் பிரச்சனை வந்து சேரும். வியாபாரத்தில் மற்றவர்களிடம் அமைதியான போக்கை கையாலுங்கள். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.


viruchigam

விருச்சிகம்: தெய்வ வழிபாட்டால் நன்மை வந்து சேரும். இன்று உங்கள் நிகழ்கால தேவைகள் நிறைவேறும். வழக்கு, பிரச்சனைகளில் நல்ல தீர்ப்பு வந்து சேரும். உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வராது. தொழில் முன்னேற்றத்திற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். புகழ் வந்து சேரும் நல்ல நாள்.


dhanusu

தனுசு: முக்கிய விடயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. புதிய முயற்ச்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்கள் நிறை, குறைகளை குடும்பத்தார் எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தரவேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை காப்பது நல்லது. எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.


magaram

மகரம்: பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியில் செல்லாமல் வீட்டில் ஓய்வு எடுப்பது நல்லது. தியானம், தெய்வ வழிபாட்டால் மன அமைதி கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டும். தொழிலில் மந்தநிலை ஏற்படும். பொறுமை தேவைப்படும் நாள்.


kumbam

கும்பம்: நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வந்து செரும். செயலில் வேகம் காட்டுவீர்கள். நீண்ட நாள் முடியாத காரியம் புதிய முயற்சியால் நிறைவேறும். உறவினர்கள் நன்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். பெண்களால் செலவு வந்து செரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். நன்மைகள் விலையும் நல்ல நாள்.


meenam

மீனம்: குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியங்கள் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எந்த செயலையும் பதறாமல் செய்தால் நன்மை உண்டாகும் நல்ல நாள்.