Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 20/03/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 20/03/2016

281
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30
மாலை – 3.30 – 4.30 மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்


mesahamமேசம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை
கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். புதுமை படைக்கும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.


mithunamமிதுனம்: இன்று நீங்கள் வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். சிலர் உங்களிடம் நயமாக பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


kadakamகடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.


simamசிம்மம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


kanniகன்னி: புது முடிவுகளை தவிர்க்கவும். உறவினர், நண்பர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


thulamதுலாம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


viruchigamவிருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். புகழ், கௌரவம் கூடும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.


magaramமகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.


kumbamகும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாகன பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


meenamமீனம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்து செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here