Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 20/12/2015

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 20/12/2015

276
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 06.00 – 07.00
மாலை – 03.15 – 04.15 மாலை – 4.30 – 06.00  மாலை – 12.00 – 01.30

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்


mesahamமேசம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். கனவு நனவாகும் நாள்.


rishabamரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.


mithunamமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்படன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளை களின் பிடிவாதம் தளரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உயரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


kadakamகடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


simamசிம்மம்: மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். பொறுமை தேவைப்படும் நாள்.


kanniகன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்கும் இடையே இருந்த மனப்போர் நீங்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது சலுகைத் திட்டங்களை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.


thulamதுலாம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் சாதித்துக் காட்டும் நாள்.


viruchigamவிருச்சிகம்: நீங்கள் திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்து பேசுவார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் ஈட்டுவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


dhanusu

தனுசு: இன்று உங்களுக்கு உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழப்பீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளில் ஏமாந்து விடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.


magaram

மகரம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்கள் நலனில் உடன் பிறந்தவர்கள் அக்கறை காட்டுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத்தவரால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மதிப்புக் கூடும் நாள்.


kumbamகும்பம்: உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


meenamமீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை உண்டு. மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உழைப்பால் உயரும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here